Bible Language

Genesis 31:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.
IRVTA   {யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போகுதல்} PS பின்பு, லாபானுடைய மகன்கள்: “எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான்” என்றும், எங்கள் தகப்பனுடைய பொருட்களினாலே இந்த செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.
ERVTA   ஒரு நாள், லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேட்டான். அவர்கள், "நம் தந்தைக்குரிய அனைத்தையும் யாக்கோபு எடுத்துக் கொண்டான். அதனால் பணக்காரனாகிவிட்டான். நம் தந்தையிடம் இருந்தே இச்செல்வத்தை எடுத்துக் கொண்டான்" என்றனர்.
RCTA   ஒரு நாள் லாபானின் மக்கள் தங்களுக்குள்ளே பேசி: நம் தந்தைக்கு உண்டான சொத்துக்களையெல்லாம் யாக்கோபு அபகரித்து, அவருடைய சொத்தைக் கொண்டே, தான் செல்வந்தனாகிப் புகழ் உடையவனானான் என்று சொன்னதை யாக்கோபு கேட்டிருந்ததுமல்லாமல்,
ECTA   லாபானின் புதல்வர், "நம் தந்தைக்குரிய யாவற்றையும் யாக்கோபு கைப்பற்றி அவருடைய சொத்தைக்கொண்டே, இந்தச் செல்வத்தை எல்லாம் சேர்த்துக்கொண்டான்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதை யாக்கோபு கேட்டார்.