Bible Language

Hosea 7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே பறிகாரரின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள்.
IRVTA   நான் என் மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே கொள்ளைக்காரர்களின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள்.
ERVTA   "நான் இஸ்ரவேலைக் குணப்படுத்துவேன். பிறகு ஜனங்கள் எப்பிராயீம் பாவம் செய்ததை அறிவார்கள். ஜனங்கள் சமாரியவின் பொய்களை அறிவார்கள். ஜனங்கள் நகரத்திற்குள் வந்து போகிற திருடர்களைப் பற்றி அறிவார்கள்.
RCTA   நாம் இஸ்ராயேலைக் குணமாக்க வரும் போது, எப்பிராயீம் அக்கிரமம் வெளியாகும், சமாரியாவின் தீச்செயல்கள் புலனாகும். ஏனெனில் அவர்கள் வஞ்சகம் செய்கிறார்கள், திருடர்கள் உள்ளே நுழைகிறார்கள், கொள்ளைக் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.
ECTA   நான் இஸ்ரயேலைக் குணமாக்கும் போது, எப்ராயிமின் தீச்செயல் வெளிப்படும்; சமாரியாவின் பொல்லாப்புகள் புலப்படும்; அவர்கள் வஞ்சகம் செய்கின்றார்கள்; திருடன் உள்ளே நுழைகின்றான்; கொள்ளையர் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.