Bible Language

Luke 16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
IRVTA   {நேர்மையற்ற நிர்வாகி} PS பின்னும் அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: செல்வந்தனாகிய ஒரு மனிதனுக்கு நிர்வாகி ஒருவன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய சொத்துக்களை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
ERVTA   இயேசு அவரது சீஷரை நோக்கி, ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். வியாபாரத்தைக் கவனிக்கும் பொருட்டு அவனிடம் ஒர் அதிகாரி இருந்தான். அந்த அதிகாரி ஏமாற்றுவதாக அச்செல்வந்தனுக்குப் புகார்கள் வந்தன.
RCTA   மேலும் அவர் தம் சீடர்களுக்குச் சொன்னதாவது: "பணக்காரன் ஒருவனிடம் கண்காணிப்பாளன் ஒருவன் இருந்தான். தன் தலைவனின் உடைமைகளை விரயம் செய்ததாக அவன்மீது குற்றம் சாட்டப்பட்டது
ECTA   இயேசு தம் சீடருக்குக் கூறியது; "செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.