Bible Language

Colossians 3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
IRVTA   {பரிசுத்த ஜீவியத்திற்கான விதிமுறைகள்} PS நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
ERVTA   கிறிஸ்துவோடு நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டீர்கள். எனவே, பரலோகத்தில் உள்ளவற்றைப் பெற முயற்சி செய்யுங்கள். அங்கே தேவனுடைய வலது பக்கத்தில் கிறிஸ்து வீற்றிருக்கிறார்.
RCTA   கிறிஸ்துவோடு நீங்கள் உயிர்த்தெழுந்தவர்களாயின் மேலுலகில் உள்ளவற்றை நாடுங்கள். அங்கேதான், கிறிஸ்து கடவுளின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார்.
ECTA   நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவாகளானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.