Bible Language

Exodus 10:19 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுகிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.
IRVTA   அப்பொழுது யெகோவா மகா பலத்த மேற்குக்காற்றை வீசும்படிச் செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளிகூட மீதியாக இருக்கவில்லை.
ERVTA   எனவே, கர்த்தர் காற்றின் திசையை மாற்றி மேற்கிலிருந்து மிகப் பலமான காற்று ஒன்று வீசும்படியாகச் செய்தார். அது வெட்டுக்கிளிகளை எகிப்திலிருந்து அகற்றி, செங்கடலில் விழச்செய்தது. எகிப்தில் ஒரு வெட்டுக்கிளிகூட இருக்க வில்லை!
RCTA   அவர் மிக்க வேகமான மேற்காற்று வீசச் செய்தார். அக்காற்று வெட்டுக்கிளிகளை வாரிச் செங்கடலில் தள்ளிவிட்டது. எகிப்தியரின் எல்லையுளெல்லாம் ஒன்றேனும் நிற்கவில்லை.
ECTA   அது வெட்டுக்கிளிகளை வாரிக்கொண்டு அவற்றைச் செங்கடலில் வீசியெறிந்தது. வெட்டுக்கிளிகளில் ஒன்றைக்கூட அது எகிப்தின் எல்லைகளுக்குள் விட்டுவைக்கவில்லை.