Bible Language

Exodus 13:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.
IRVTA   அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; யெகோவா பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம்.
ERVTA   அப்போது மோசே ஜனங்களிடம், "இந்த நாளை நினைவுகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் இந்த நாளில் கர்த்தர் அவரது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி உங்களை விடுதலை செய்தார். நீங்கள் புளிப்புள்ள ரொட்டியை உண்ணக்கூடாது.
RCTA   ஆகையால், மோயீசன் மக்களை நோக்கி: நீங்கள் எகிப்தினின்றும் அதன் அடிமைத்தனத்தினின்றும் விடுதலை அடைந்த இந்நாளை நினைவில் கொள்ளுங்கள். ஆண்டவர் தமது வலிய கையைக் கொண்டு உங்களை அவ்விடத்தினின்று வெளியேற்றினார் அல்லவா? ஆதலால், நீங்கள் புளித்த அப்பத்தை உண்ணாதிருக்கக் கடவீர்கள்.
ECTA   மோசே மக்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்; அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து நீங்கள் வெளியேறிச் சென்ற இந்நாளை நினைவு கூருங்கள். இந்நாளில்தான் ஆண்டவர் தம் கைவன்மையால் உங்களை இங்கிருந்து வெளியேறவைத்தார். நீங்கள் புளித்த அப்பம் உண்ணலாகாது.