Bible Language

Ezekiel 20 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஏழாம் வருஷத்து ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே இஸ்ரவேலின் மூப்பரில் சிலர் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.
IRVTA   {கலகக்காரர்களான இஸ்ரவேல்} PS பாபிலோனின் சிறையிருப்பின் ஏழாம் வருடத்து ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியிலே இஸ்ரவேலின் மூப்பர்களில் சிலர் யெகோவாவிடம் விசாரிக்கும்படி வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.
ERVTA   ஒரு நாள், சில மூப்பர்கள் (தலைவர்கள்) இஸ்ரவேலில் இருந்து, கர்த்தரிடம் ஆலோசனை கேட்க என்னிடம் வந்தனர். இது கைதியான ஏழாம் ஆண்டு ஐந்தாம் மாதம் பத்தாம் நாள். அம் மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்தார்கள்.
RCTA   ஏழாம் ஆண்டின் ஐந்தாம் மாதத்தில் பத்தாம் நாள் இஸ்ராயேல் மக்களின் மூப்பர் சிலர் ஆண்டவருடைய ஆலோசனையைக் கேட்பதற்காக என் முன் வந்து உட்கார்ந்தார்கள்:
ECTA   ஏழாம் ஆண்டில், ஐந்தாம் மாதத்தின் பத்தாம் நாளன்று, இஸ்ரயேல் மக்களின் பெரியோருள் சிலர் ஆண்டவரின் திருவுளத்தைக் கேட்டறிய வந்து, என் முன் அமர்ந்தனர்.