Bible Language

Ezekiel 48:15 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இருபத்தையாயிரங்கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாயிருக்கும் ஐயாயிரங்கோலோவென்றால், பரிசுத்தமாயிராமல், குடியேறும் நகரத்துக்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருப்பதாக.
IRVTA   இருபத்தைந்தாயிரம் கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாக இருக்கும் ஐயாயிரம் கோலோவென்றால், பரிசுத்தமாக இல்லாமல், குடியேறும் நகரத்திற்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருக்கட்டும்.
ERVTA   ‘5,000 முழம் (1.6 மைல்) அகலமும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் கொண்ட நிலப்பகுதி ஆசாரியர்களுக்காகவும் லேவியர்களுக்காகவும் கொடுத்த நிலத்தின் மீதியாகும். இது நகரத்துக்கும் மிருகங்களின் மேய்ச்சலுக்கும் வீடுகள் கட்டுவதற்கும் உதவும் போது ஜனங்கள் இதனைப் பயன்படுத்தலாம். இதன் மத்தியில் நகரம் அமையும்.
RCTA   இருபத்தையாயிரம் கோல் நீளமும், ஐயாயிரம் கோல் அகலமும் உள்ள மீதி இடம் பொதுவானது; நகரத்தின் குடியிருப்புக்கும், இதன் வெளி நிலம் தோட்டங்களுக்கும் விடப்படும்; நகரம் அதன் நடுவில் கட்டப்படும்.
ECTA   ஐயாயிர முழ அகலமும் இருபத்தையாயிர முழ நீளமும் கொண்ட எஞ்சிய பகுதி பொதுவானது. இது நகருக்காகவும் வீடுகளுக்காகவும் திறந்த வெளிக்காகவும் ஒதுக்கப்படும். நகர் அதன் நடுவில் இருக்கும்.