Versions
TOV அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
IRVTA அவன் கொடூரமான மனிதனாக இருப்பான்; அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும், எல்லோருடைய கையும் விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் † கிழக்கில் குடியிருப்பான்” என்றார்.
ERVTA "இஸ்மவேல் காட்டுக் கழுதையைப் போன்று முரடனாகவும், சுதந்திரமானவனாகவும் இருப்பான். அவன் ஒவ்வொருவருக்கும் விரோதமாக இருப்பான். ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக இருப்பார்கள். அவன் ஒவ்வொரு இடமாகச் சுற்றித் தன் சகோதரர்கள் அருகில் குடியேறுவான். அவர்களுக்கும் அவன் விரோதமாக இருப்பான்" என்றான்.
RCTA அவன் கொடும் குணமுள்ள மனிதனாய் வளர்வான். அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் ஓங்கியிருக்கும். தன் சகோதரர் அனைவரும் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களுக்கெதிராக அவன் குடியிருப்பான் என்றார்.
ECTA ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லோரையும் அவன் எதிர்ப்பான் எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்" என்றார்.