Bible Language

Isaiah 3:9 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
IRVTA   அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்களுடைய ஆத்துமாவுக்கு ஐயோ, தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்கிறார்கள்.
ERVTA   தாங்கள் குற்றவாளிகள் என்றும் தாங்கள் செய்வது தவறு என்றும், அவர்களின் முகங்கள் காட்டும். அவர்கள் தங்கள் பாவங்களுக்காகப் பெருமை அடைகிறார்கள். அவர்கள் சோதோம் நகர ஜனங்களைப்போன்று தங்கள் பாவங்களை யார் கவனிக்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இது அவர்களுக்கு மிகக் கேடுதரும். அவர்கள் தமக்கே பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
RCTA   அவர்களின் ஓரவஞ்சனையே அவர்களுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது, சோதோமைப் போல் தங்கள் பாவத்தைப் பறைசாற்றுகின்றனர், அதை மறைத்து வைப்பதில்லை. அவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் தங்கள் மேல் தீமையைத் தாங்களே வருவித்தனர்.
ECTA   அவர்களின் ஓரவஞ்சனை அவர்களுக்கு எதிராய்ச் சான்று கூறுகின்றது; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல் சோதோம் மக்களைப்போல் பறைசாற்றுகிறார்கள். ஐயோ! அவர்கள் உயிருக்குக் கேடு; ஏனெனில், தங்களுக்குத் தாங்களே தீமையை வருவித்துக்கொண்டார்கள்.