Bible Language

Isaiah 41:9 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.
IRVTA   நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் ஊழியக்காரன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.
ERVTA   பூமியில் நீங்கள் வெகு தொலைவில் இருந்தீர்கள். நீங்கள் தொலைதூர நாட்டில் இருந்தீர்கள். ஆனால் நான் உன்னிடம் தேடிவந்து உன்னை அழைத்துச் சொன்னேன், ‘நீ எனது ஊழியன். நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நான் உன்னைத் தள்ளிவிடவில்லை!
RCTA   உலகின் கடைசிப் பகுதிகளிலிருந்து உன்னைக் கூட்டி வந்தோம், தொலைநாடுகளிலிருந்து உன்னை வரவழைத்தோம்; "நீ நம்முடைய ஊழியன்; உன்னைத் தேர்ந்து கொண்டோம், உன்னைத் தள்ளிவிட வில்லை" என்றுனக்குச் சொன்னோம்.
ECTA   உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்; தொலைநாடுகளினின்று உன்னை அழைத்தேன்; "நீ என் அடியவன்; நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்; உன்னை நான் தள்ளிவிடவில்லை" என்று சொன்னேன்.