Versions
TOV சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்.
IRVTA சந்ததி சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரே நாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான மந்திரவித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாக உன்மேல் வரும்.
ERVTA இந்த இரண்டும் திடீரென்று உனக்கு நிகழும். முதலில் நீ உனது பிள்ளைகளை இழப்பாய். பிறகு நீ உனது கணவனை இழப்பாய். ஆம் இவை உனக்கு உண்மையில் நிகழும். உனது அனைத்து மந்திரங்களும் தந்திரங்களும் உன்னைக் காப்பாற்றாது.
RCTA மலட்டுத்தன்மை, கைம்மை இவ்விரண்டும் நெடிப்பொழுதில் ஒரே நாளில் உனக்கு நேரும்; நீ கணக்கற்ற பில்லி சூனியங்களைக் கையாண்டாலும், உன் மந்திரவாதங்களுக்கு மிதிமிஞ்சிய ஆற்றலிருப்பினும், இந்த தீமைகளெல்லாம் உனக்கு வந்தே தீரும்.
ECTA இவை இரண்டும் திடீரென ஒரே நாளில் உனக்கு நேரிடும்; பில்லி சூனியங்கள் பலவற்றை நீ கையாண்டாலும், ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும், பிள்ளை இழப்பும் கைம்மையும் முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும்.