Bible Language

Isaiah 48:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
IRVTA   நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு இரகசியமாகப் பேசவில்லை; அது உண்டான காலத்திலிருந்தே அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ யெகோவாவாகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
ERVTA   இங்கே வா, என்னைக் கவனி! பாபிலோன் ஒரு தேசமாக ஆரம்பமாகும்போது நான் அங்கிருந்தேன். தொடக்கத்திலேயிருந்து நான் தெளிவாகப் பேசினேன். எனவே, நான் என்ன சொன்னேன் என்று ஜனங்களால் அறியமுடியும்." பிறகு ஏசாயா சொன்னான், "இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னையும் அவரது ஆவியையும் இவற்றை உங்களிடம் சொல்ல அனுப்பியிருக்கிறார்.
RCTA   நம்மிடம் அணுகி வந்து வந்து இதைக் கேளுங்கள்; முதலிலிருந்தே நாம் மறை பொருளாய்ப் பேசினதில்லை; இவை நிகழத்தொடங்கிய காலத்திலிருந்தே நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம்." இப்பொழுது கடவுளாகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகின்றனர்.
ECTA   என் அருகில் வந்து இதைக் கேளுங்கள்; தொடக்கமுதல் நான் மறைவாகப் பேகியதில்லை; அது நிகழ்ந்த காலம் முதல், நான் அங்கே இருக்கின்றேன். இப்பொழுது என் தலைவராகிய ஆண்டவர் என்னையும் அவர்தம் ஆவியையும் அனுப்பியுள்ளார்.