Bible Language

Joel 2:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.
IRVTA   அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; போர்வீரர்களைப்போல மதில் ஏறும்; வரிசைகள் கலையாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.
ERVTA   வீரர்கள் விரைவாக ஓடுகிறார்கள். வீரர்கள் சுவர்களின் ஏறுகிறார்கள். ஒவ்வொரு வீரனும் நேராகக் செல்கிறான். அவர்கள் தம் பாதையில் இருந்து விலகமாட்டார்கள்.
RCTA   போர் வீரர்களைப்போல் அவை தாக்குகின்றன, படை வீரர்களைப் போலச் சுவர் மேல் ஏறுகின்றன; ஒவ்வொன்றும் தன் போக்கின்படி முன்னேறுகிறது, தங்கள் வழிகளை விட்டு அவை பிறழ்வதில்லை.
ECTA   அவை போர் வீரர்களைப்போல் தாவி ஓடுகின்றன; படை வீரர்களைப்போல் சுவர்மேல் ஏறுகின்றன; ஒவ்வொன்றும் தனக்குரிய பாதையில் போகின்றது; தங்கள் இலக்கைவிட்டு அவை பிறழ்வதில்லை.