Bible Language

Joshua 22:30 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது.
IRVTA   ரூபனுடைய கோத்திரத்தார்களும், காத்தின் கோத்திரத்தார்களும், மனாசே கோத்திரத்தார்களும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடு இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரம்பேர்களின் தலைவர்களும் கேட்டபோது, அது பார்வைக்கு நன்றாக இருந்தது.
ERVTA   ரூபன், காத், மனாசே கோத்திரத்தினர் கூறியவற்றை ஆசாரியனாகிய பினெகாசும் அவனோடு வந்த தலைவர்களும் கேட்டார்கள். அந்த ஜனங்கள் உண்மையே கூறுகிறார்கள் என்று அவர்கள் திருப்தி அடைந்தார்கள்.
RCTA   ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் முன்சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோது. குருவாயிருந்த பினேயெசும் அவரோடு தூது சென்றிருந்த கோத்திரத் தலைவர்களும் கோபம் தணிந்து மிகுந்த திருப்தியடைந்தனர்.
ECTA   ரூபன் மக்களும், காத்து மக்களும், மனாசே மக்களும் கூறியதைக் குரு பினகாசும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களான ஆயிரத்தவர் தலைவர்களும் கேட்டனர். அவர்களுக்கு அது நலமெனப்பட்டது.