Bible Language

Luke 16:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
IRVTA   பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
ERVTA   பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ԅஎனது எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு? என்றான். அவன், ԅநான் நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன் என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி அவனிடம், ԅஇதோ உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எழுது. எண்பது மரக்கால் என்று எழுது என்றான்.
RCTA   பின்னர், மற்றொருவனிடம், 'நீ எவ்வளவு கடன்பட்டிருக்கிறாய்?' என, அவன், 'நூறு கலம் கோதுமை' என்றான். அதற்கு அவன், 'இதோ! உன் கடன்பத்திரம், எண்பது என எழுது' என்றான்.
ECTA   பின்பு அடுத்தவரிடம், "நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு மூடை கோதுமை" என்றார். அவர், "இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்" என்றார்.