Bible Language

Numbers 21:5 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.
IRVTA   மக்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: “நாங்கள் வனாந்திரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்தது ஏன்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்களுடைய மனதிற்கு வெறுப்பாக இருக்கிறது என்றார்கள்.
ERVTA   அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் எதிராக முறுமுறுக்கத் துவங்கினார்கள். அவர்கள், "ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்கள் இங்கே பாலைவனத்தில் மரித்துக் கொண்டிருக்கிறோம்! உண்ண அப்பம் இல்லை! தண்ணீர் இல்லை! இந்த அற்பமான உணவை நாங்கள் வெறுக்கிறோம்!" என்றனர்.
RCTA   அவர்கள் கடவுளுக்கும் மோயீசனுக்கும் விரோதமாய்ப் பேசி: நீ எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்ததென்ன? நாங்கள் பாலைவனத்தில் சாகும்படிதானோ? இவ்விடத்தில் அப்பமுமில்லை, தண்ணீருமில்லை. இந்த அற்ப உணவு எங்கள் மனத்துக்கு வெறுப்பைத் தருகிறது என்றார்கள்.
ECTA   மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்; "இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது" என்றனர்.