Bible Language

Obadiah 1:18 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், யோசேப்பு வம்சத்தார் அக்கினி ஜூவாலையுமாயிருப்பார்கள்; ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; அவர்கள் இவர்களைக்கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.
IRVTA   யாக்கோபு வம்சத்தார்கள் நெருப்பும், யோசேப்பு வம்சத்தார்கள் நெருப்புத்தழலுமாக இருப்பார்கள்; ஏசா வம்சத்தார்களோ வைக்கோல் துரும்பாக இருப்பார்கள்; அவர்கள் இவர்களைக்கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியாக இல்லாமல் இவர்களை சுட்டெரிப்பார்கள்; யெகோவா இதைச் சொன்னார்.
ERVTA   யாக்கோபின் குடும்பம் நெருப்பைப் போன்றிருக்கும். யோசேப்பின் நாடானது சுவாலையைப் போன்றிருக்கும். ஆனால் ஏசாவின் நாடு சாம்பலைப் போன்றிருக்கும். யூதா ஜனங்கள் ஏதோமை எரிப்பார்கள். யூதா ஜனங்கள் ஏதோமை அழிப்பார்கள். அதன் பிறகு ஏசாவின் நாட்டில் தப்பிப் பிழைத்தோர் ஒருவரும் இருக்கமாட்டார்கள். ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் இதைக் கூறினார்.
RCTA   யாக்கோபின் வீட்டார் நெருப்பாய் இருப்பர், யோசேப்பின் வீட்டார் தீக்கொழுந்தாய் இருப்பர், ஏசாவின் வீட்டார் வைக்கோலாய் இருப்பர்; அவர்கள் இவர்களை முற்றிலும் சுட்டுப் பொசுக்கி விடுவர், ஏசாவின் வீட்டாருள் தப்பிப் பிழைத்தவர் யாருமிரார்; ஏனெனில் இதை ஆண்டவரே சொல்லிவிட்டார்.
ECTA   யாக்கோபின் குடும்பத்தார் நெருப்பாய் இருப்பர்; யோசேப்பின் குடும்பத்தார் தீப்பிழம்பாய் இருப்பர்; ஏசாவின் குடும்பத்தாரோ வைக்கோலாய் இருப்பர்; அவர்கள் இவர்களைத் தீக்கிரையாக்கி முற்றிலும் அழித்து விடுவார்கள்; ஏசாவின் குடும்பத்தாருள் எவருமே தப்பமாட்டார்; ஆண்டவரே இதைக் கூறினார்.