Bible Language

Psalms 143:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்கு முன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.
IRVTA   எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து,
என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி,
வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான்.
ERVTA   ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள். அவர்கள் என் உயிரை புழுதிக்குள் தள்ளிவிட்டார்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் மரித்தோரைப்போன்று என்னை இருண்ட கல்லறைக்குள் தள்ளுகிறார்கள்.
RCTA   எதிரியானவன் என்னைத் துன்புறுத்துகிறவன், என்னை நிலைகுலையச் செய்தான்: என்றோ இறந்தொழிந்தவர்களைப் போல் என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.
ECTA   எதிரி என்னைத் துரத்தினான்; என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்; என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல் என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.