Bible Language

Psalms 59:5 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா)
IRVTA   சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்;
வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா)
ERVTA   நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர். எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும். அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும்.
RCTA   ஏனெனில், படைகளின் ஆண்டவரே, இஸ்ராயேலின் இறைவன் நீரே! விழித்தெழும், புற இனத்தார் அனைவரையும் தண்டிக்க வந்தருளும்: எனக்குச் சதி செய்பவர்கள் யார் மீதும் இரக்கம் காட்டாதேயும்.
ECTA   படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! நீர் இஸ்ரயேலின் கடவுள்! பிற இனத்தார் அனைவரையும் தண்டிக்க எழுந்துவாரும்; தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள் எவருக்கும் இரக்கம் காட்டாதேயும். (சேலா)