Bible Language

Revelation 10:9 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும். ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்.
IRVTA   நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான்.
ERVTA   எனவே, நான் அத்தூதனிடம் சென்று அச்சிறு தோல்சுருளைத் தருமாறு கேட்டேன். அத்தூதன் என்னிடம் இத்தோல் சுருளை எடுத்துத் தின்று விடு. இது உன் வயிற்றில் கசப்பாக இருக்கும் ஆனால் உன் வாயில் இது தேனைப் போன்று இனிக்கும் , என்றான்.
RCTA   நானும் அந்த வானதூதரிடம் போய், அந்த ஏட்டுச் சுருளை எனக்குத் தரும்படி கேட்டேன். அவரோ, "இதை எடுத்துத் தின்றுவிடு. இது உன் வயிற்றில் கசக்கும். ஆனால் வாயிலே தேனைப்போல் இனிக்கும்" என்று என்னிடம் சொன்னார்.
ECTA   நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, "இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப்போல் இனிக்கும்" என்று என்னிடம் சொன்னார்.