Bible Language

Isaiah 56:2 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.
IRVTA   இப்படிச்செய்கிற மனிதனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி அனுசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.
ERVTA   ஓய்வு நாளில் தேவனுடைய சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான். தீமை செய்யாதவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
RCTA   இவ்வாறு செய்கிறவன் பேறு பெற்றவன்; இதைக் கைக்கொண்டு ஓய்வு நாளை அவசங்கை செய்யாமல் அதைக் கடைப் பிடித்து, எவ்வகையிலும் தீமை செய்யாமல் தன் கைகளைக் காத்துக்கொள்ளுகிற மனிதனும் பேறு பெற்றவன்!"
ECTA   இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்; ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர்.