Bible Language

Jeremiah 3:6 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்பண்ணினாள்.
IRVTA   {உண்மையற்ற இஸ்ரவேல்} PS யோசியா ராஜாவின் நாட்களில் யெகோவா என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான எல்லா மலையின்மேலும், பச்சையான எல்லா மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்செய்தாள்.
ERVTA   யோசியா அரசன் யூதா நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த காலத்தில், கர்த்தர் என்னோடு பேசினார். அவர், "எரேமியா, இஸ்ரவேல் செய்த தீமைகளை நீ பார்த்தாய். எவ்வாறு அவள் எனக்கு விசுவாசமில்லாமல் நடந்துகொண்டாள், என்பதை நீ அறிவாய். ஒவ்வொரு மலை உச்சியின் மேலும் பச்சை மரங்களின் கீழும், விக்கிரகங்களோடும், சோரம் போய் அவள் பாவம் செய்தாள்.
RCTA   யோசியாஸ் அரசன் நாட்களில் ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "பிரமாணிக்கமற்ற இஸ்ராயேல் என்னும் மங்கை என்ன செய்தாள், பார்த்தாயா? தன் விருப்பம் போல் உயர்ந்த மலை தோறும், தழைத்த மரத்தின் அடியிலெல்லாம் வேசித்தனம் பண்ணினாள்.
ECTA   யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர் என்னிடம் கூறியது; "நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள்.