Bible Language

Luke 16:3 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.
IRVTA   அப்பொழுது அந்த நிர்வாகி: நான் என்ன செய்வேன், என் எஜமான் நிர்வாக பொறுப்பிலிருந்து என்னை நீக்கிப்போடுகிறானே நிலத்தை பண்படுத்துவதற்கும்; எனக்குப் பெலனில்லை, பிச்சையெடுக்கவும் வெட்கப்படுகிறேன்.
ERVTA   பின்னர் அந்த அதிகாரி தனக்குள்ளேயே, ԅநான் என்ன செய்வேன். என் எஜமானர் என்னை வேலையில் இருந்து அகற்றிவிட்டார். குழிகளைத் தோண்டுமளவு வலிமை என்னிடம் இல்லை. பிச்சை எடுக்க வெட்கப்படுகிறேன்.
RCTA   அப்போது கண்காணிப்பாளன், 'இனி என்ன செய்வது? கண்காணிப்பினின்று என்னைத் தலைவன் நீக்கிவிடப்போகிறானே. மண்வெட்டவோ எனக்கு வலிமையில்லை; பிச்சையெடுக்கவோ வெட்கமாய் இருக்கிறது.
ECTA   அந்த வீட்டுப் பொறுப்பாளர், "நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.