Bible Language

Numbers 8:19 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்.
IRVTA   லேவியர்கள் இஸ்ரவேல் மக்களுடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படியும், இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படியும், இஸ்ரவேல் மக்கள் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் மக்களில் வாதை உண்டாகாதபடியும், லேவியர்களை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசாகக் கொடுத்தேன்” என்றார்.
ERVTA   இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களிலிருந்தும் லேவியர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் தத்தமாகக் கொடுத்தேன். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்காவும் சேவை செய்வார்கள். இஸ்ரவேல் ஜனங்களை சுத்தப்படுத்தும் பலிகளைச் செலுத்த உதவி செய்வார்கள். இதனால் பெருநோய்களும், துன்பங்களும் இஸ்ரவேலர்கள் பரிசுத்தமான இடத்திற்குள் வரும்போது ஏற்படுவதில்லை" என்றார்.
RCTA   அவர்கள் இஸ்ராயேல் மக்கள் சார்பாக உடன்படிக்கைக் கூடாரத்தில் பணிவிடை செய்யும்படியாகவும், இஸ்ராயேல் மக்களில் மற்ற எவனாயினும் மூலத்தானத்தின் உள்ளே புகத் துணிந்தால் இஸ்ராயேல் மக்களுக்குத் துன்பம் உண்டாகாதபடி அவர்களுக்காக வேண்டிக் கொள்ளும்படியாகவும், நாம் லேவியரை இஸ்ராயேல் மக்களினின்று பிரித்தெடுத்து, ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் நன்கொடையாகக் கொடுத்தோம் என்றார்.
ECTA   இஸ்ரயேல் மக்களுள் லேவியரை நான் ஆரோனிடமும், அவன் புதல்வரிடமும் கொடையாக அளித்துவிட்டேன்; இஸ்ரயேல் மக்களுக்காக அவர்கள் சந்திப்புக் கூடாரத்தில் பணி செய்வார்கள்; இஸ்ரயேல் மக்களுக்காகக் கறை நீக்கப் பலியையும் செலுத்துவார்கள்; இதனால் இஸ்ரயேல் மக்கள் தூயகத்தை அடுத்து வரவேண்டியிருந்தாலும், இஸ்ரயேல் மக்களுக்குத் தீங்கு ஏதும் நேரிடாது.