Bible Language

1 Samuel 2:36 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப் பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட யாதொரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்லுகிறார் என்றான்.
IRVTA   அப்பொழுது உன்னுடைய வீட்டார்களில் மீதியாக இருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப் பணத்திற்காகவும் ஒரு அப்பத்துண்டுக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட ஏதாவது ஒரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்கிறார் என்றான். PE
ERVTA   பிறகு உன் குடும்பத்தில் மீதியான எல்லோரும் வந்து அந்த ஆசாரியன் முன்பு பணிந்து, வணங்கி நிற்பார்கள். அவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காகவும், சில்லறை காசுகளுக்காகவும் பிச்சை எடுப்பார்கள். அப்போது அவர்கள், "தயவு செய்து எனக்கு ஆசாரியன் வேலை தாரும். அதனால் நான் உண்ண உணவை பெறுவேன்" என்று வேண்டுவார்கள்’" என்று கூறினான்.
RCTA   அப்போது நடக்கவிருப்பதாவது: உன் வீட்டில் எஞ்சியிருப்பவன் எவனும் வந்து தனக்காக வேண்டிக்கொள்ளும்படி சொல்வான்; ஒரு வெள்ளிக்காசும் ஒரு ரொட்டியும் ஒப்புக்கொடுப்பான்; அப்போது அவன், "நான் ஒருவாய் ரொட்டி சாப்பிடும்படி நீங்கள் தயவு செய்து குருவுக்குரிய ஒரு பாகத்தை எனக்குக் கொடுங்கள்" என்று கெஞ்சி மன்றாடுவான்'" என்றார்.
ECTA   எஞ்சியுள்ள உன் வீட்டார் அனைவரும் ஒரு வெள்ளிக் காசுக்கோ ஓர் அப்பத்துக்கோ அவனிடம் வந்து கையேந்தி நின்று "தயைகூர்ந்து எனக்கு ஓர் அப்பம் கிடைக்குமாறு குருத்துவ ஊழியத்தில் என்னைச் சேர்த்தருளும்" என்பார்கள்.