Bible Language

1 Timothy 5:14 (KJV) King James Version

Versions

TOV   ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.
IRVTA   எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
ERVTA   ஆகையால் இளம் விதவைகள் மீண்டும் திரு மணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, வீட்டைக் கவனித்துக் கொள்வார்களாக. இதுவே அவர்கள் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த வழியில் அவர்கள் எதிரிக்கு விமர்சிக்கும் வாய்ப்பை கொடுக்கமாட்டார்கள்.
RCTA   எனவே, இளம் கைம்பெண்கள் மீளவும் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்று, குடும்பத்தை நடத்தவேண்டும். இதுவே என் விருப்பம். அப்பொழுது நம்மைக் குறைகூற எதிரிக்கு எவ்வித வாய்ப்பும் இராது.
ECTA   எனவே, இளம் கைம்பெண்கள் மீண்டும் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்று, வீட்டுத் தலைவிகளாய் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்; அப்போது எதிரி பழி தூற்ற எந்த வாய்ப்பும் இராது.