Bible Language

2 Samuel 16:18 (KJV) King James Version

Versions

TOV   அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்.
IRVTA   அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, யெகோவாவும் இந்த மக்களும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரோடு நான் சேர்ந்து அவரோடு இருப்பேன்.
ERVTA   அதற்கு ஊசாய், "கர்த்தர் தேர்ந்தெடுக்கும் ஆளைச் சார்ந்தவன் நான். இந்த ஜனங்களும் இஸ்ரவேலரும் உம்மைத் தேர்ந்தெடுத்தனர். நான் உம்மோடு தங்குவேன்.
RCTA   கூசாயி அப்சலோமை நோக்கி, "அப்படியன்று; ஆண்டவரும் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் எவரைத் தேர்ந்து கொண்டார்களோ, அவரோடு நான் இருக்க வேண்டும்; அவரோடு தான் இருப்பேன்.
ECTA   அதற்கு ஊசாய் அப்சலோமிடம் கூறியது; "இல்லை! ஆண்டவரும் இந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் யாரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களோ அவருக்காகவே நான் இருப்பேன்; அவரோடு தான் நான் தங்குவேன்;