Bible Language

Acts 20:7 (KJV) King James Version

Versions

TOV   வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
IRVTA   {ஐத்திகு உயிரோடு எழுந்திருத்தல்} PS வாரத்தின் முதல்நாளில், அப்பம் புசிக்கும்படி சீடர்கள் கூடி வந்திருக்கும்பொழுது, பவுல் அடுத்தநாள் புறப்படவேண்டும் என்பதால், அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான்.
ERVTA   கர்த்தரின் திருவிருந்தை உண்பதற்காக நாங்கள் அனைவரும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று கூடினோம். பவுல் கூட்டத்தில் பேசினான். மறுநாள் அங்கிருந்து செல்லத் திட்டமிட்டான். நள்ளிரவு வரைக்கும் பவுல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான்.
RCTA   வாரத்தின் முதல் நாளில் அப்பத்தைப் பிட்குதற்காக நாங்கள் கூடியிருந்தோம். மறுநாள் சின்னப்பர் ஊரை விட்டுப் போகவேண்டியிருந்தது. அங்கிருந்தவர்களுடன் உரையாடத் தொடங்கி நள்ளிரவுவரை பேசிக்கொண்டே போனார்.
ECTA   வாரத்தின் முதல் நாள் அப்பம் பிடுவதற்காக நாங்கள் கூடியிருந்தோம். மறுநாள் பவுல் புறப்பட வேண்டியிருந்ததால் நள்ளிரவு வரை அவர் அவர்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார்.