Bible Language

Genesis 22:5 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.
IRVTA   அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரர்களை நோக்கி: “நீங்கள் கழுதையுடன் இங்கே காத்திருங்கள், நானும் சிறுவனும் அந்த இடத்திற்குப் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்திற்குத் திரும்பி வருவோம்” என்றான்.
ERVTA   ஆபிரகாம் தனது வேலைக்காரர்களிடம், "கழுதையோடு நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள், நானும் என் மகனும் அவ்விடத்திற்கு தொழுதுகொள்ளப் போகிறோம். பிறகு உங்களிடம் திரும்பி வருவோம்" என்றான்.
RCTA   நீங்கள் கழுதையைப் பார்த்துக் கொண்டு இங்கே காத்திருங்கள். நானும் என் மகனும் அவ்விடம் விரைந்து சென்று (ஆண்டவரை) ஆராதித்த பின் உங்களிடம் திரும்பி வருவோம் என்றார்.
ECTA   உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, "நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவனிடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்" என்றார்.