Bible Language

Isaiah 58:9 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
IRVTA   அப்பொழுது நீ கூப்பிடுவாய், யெகோவா மறுமொழி கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்வார். நுகத்தடியையும், குற்றம்சாட்டுதலையும், அநியாய வார்த்தைகளையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
ERVTA   பிறகு நீங்கள் கர்த்தரை அழைப்பீர்கள். கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்வார். நீ கர்த்தரிடம் சத்தமிடுவாய். அவர் ‘நான் இங்கே இருக்கிறேன்!’ என்பார். ஜனங்களுக்குத் துன்பங்களையும், சுமைகளையும் கொடுப்பதை நிறுத்தவேண்டும். நீங்கள் அநியாயமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், மற்றவர்களைக் குறைசொல்வதையும் நிறுத்த வேண்டும்.
RCTA   அப்போது, ஆண்டவரை கூவியழைப்பாய், அவரும் உன் மன்றாட்டைக் கேட்டருள்வார்; அவரை நோக்கிக் கூக்குரலிடுவாய், அவரும், 'இதோ இருக்கிறோம்' என்பார். "உன் நடுவிலிருந்து நுகத்தடியைத் தள்ளிவிட்டு, உன் அயலானுக்கு எதிராய்க் கையோங்காமல், அடாததொன்றையும் சொல்லாமல் இருந்தால்,
ECTA   அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் "இதோ! நான்" என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,