Bible Language

Isaiah 6:11 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
IRVTA   அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனித நடமாட்டமில்லாமலும் பாழாகி, பூமி வெட்டவெளியாகி,
ERVTA   பிறகு நான், "ஆண்டவரே, நான் எவ்வளவு காலம் இதனைச் செய்ய வேண்டும்?" எனக் கேட்டேன். அதற்குக் கர்த்தர், "நகரங்கள் அழிந்து போகும்வரை இதனைச் செய். ஜனங்கள் போகும்வரை செய். வீடுகளில் எவரும் வாழாத நிலைவரும்வரை செய். பூமி அழிந்து காலியாகும்வரை செய்", என்றார்.
RCTA   அதற்கு நான், "எவ்வளவு காலத்திற்கு, ஆண்டவரே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "பட்டணங்கள் பாழாகிக் குடியிருப்பாரற்று, வீடுகளில் மனிதர்களின்றி, நாடு முற்றிலும் பாழடைந்து
ECTA   அதற்கு நான், என் தலைவரே! எத்துணை காலத்திற்கு இது இவ்வாறிருக்கும்?" என்று வினவினேன். அதற்கு அவர், "நகரங்கள் அழிந்து இல்லாதனவாகும்; வீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார்; நாடு முற்றிலும் பாழ்நிலமாகும்;