Bible Language

Jonah 4:5 (KJV) King James Version

Versions

TOV   பின்பு யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்துக்குக் கிழக்கே போய், அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத்துக்குச் சம்பவிக்கப்போகிறதைத் தான் பார்க்குமட்டும் அதின் கீழ் நிழலில் உட்கார்ந்திருந்தான்.
IRVTA   பின்பு யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்திற்குக் கிழக்கே போய், அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத்திற்கு நடக்கப்போகிறதைத் தான் பார்க்கும்வரைக்கும் அதின் கீழே நிழலில் உட்கார்ந்திருந்தான்.
ERVTA   யோனா இவை எல்லாவற்றுக்காகவும் கோபத்தோடு இருந்தான். எனவே அவன் நகரத்தை விட்டுப்போனான். யோனா, நகரத்திற்குக் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு இடத்திற்குச் சென்று, தனக்கென்று ஒரு இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான். பிறகு அவன் அங்கே நிழலில் உட்கார்ந்து, நகரத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கக் காத்துக்கொண்டிருந்தான்.
RCTA   பின்பு யோனாஸ் நகரத்தினின்று வெளியேறி, நகரத்திற்குக் கிழக்கே போய்த் தங்கினார்; அங்கே தமக்கு ஒரு பந்தற் போட்டு, நகரத்திற்கு நிகழப் போவதைக் காணும் வரையில் பந்தலின் நிழலில் காத்திருந்தார்.
ECTA   யோனாவோ நகரைவிட்டு வெளியேறினார்; நகருக்குக் கிழக்கே போய் உட்கார்ந்துகொண்டார். பிறகு அவர் தமக்கு ஒரு பந்தலை அங்கே அமைத்துக்கொண்டு, நகருக்கு நிகழப் போவதைப் பார்ப்பதற்காக அதன் நிழலில் அமர்ந்திருந்தார்.