Bible Language

Lamentations 1:2 (KJV) King James Version

Versions

TOV   இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.
IRVTA   இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்;
அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது;
அவளுக்குப் பிரியமானவர்களில் அவளைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை;
அவளுடைய நண்பர்கள் அனைவரும் அவளுக்குத் துரோகிகளும் விரோதிகளுமானார்கள்.
ERVTA   அவள் இரவில் பரிதாபமாக அழுகிறாள். அவளது கண்ணீர் அவளின் கன்னங்களில் உள்ளது. இப்பொழுது யாருமே அவளைத் தேற்றுவாரில்லை. பல நாடுகள் அவளிடம் நட்புடனிருந்தன. இப்பொழுது யாரும் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை. அவளது அனைத்து நண்பர்களும் அவளுக்கு முதுகைத் திருப்பிக் கொண்டனர். அவளது நண்பர்கள் அவளின் எதிரிகளானார்கள்.
RCTA   பேத்: இரவெல்லாம் இடைவிடாது அழுத கண்ணீர் அவள் கன்னங்களில் ஒடி வழிகின்றது; காதலர் அவளுக்குப் பலரிருந்தும், தேற்றுவோன் அவருள் எவனுமில்லை, நண்பர்கள் யாவரும் அவளை வஞ்சித்துப் பகைவராய் மாறிப் போனார்கள்.
ECTA   ஆறாத் துயருற்று இரவில் அவள் அழுகின்றாள்; அவளின் கன்னங்களில் கண்ணீர் வடிகின்றது; அவளின் காதலரில் தேற்றுவார் எவரும் இல்லை; அவளின் நண்பர் அனைவரும் அவளுக்குத் துரோகம் செய்து பகைவர் ஆயினர்.