Bible Language

Hosea 9:7 (KJV) King James Version

Versions

TOV   விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள்.
IRVTA   விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடர்களும், ஆவியைப் பெற்ற மனிதர்கள் பைத்தியம் பிடித்தவர்களுமாக இருக்கிறார்கள்.
ERVTA   தீர்க்கதரிசி. "இஸ்ரவேலே, இவற்றைக் கற்றுக்கொள். தண்டனைக் காலம் வந்துவிட்டது. நீ செய்த பாவங்களுக்கு விலை செலுத்தவேண்டிய காலம் வந்திருக்கிறது" என்கிறார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, "தீர்க்கதரிசி ஒரு முட்டாள். தேவனுடைய ஆவியோடு இருக்கிற இம்மனிதன் பைத்தியக்காரன்" என்று கூறுகிறார்கள். தீர்க்கதரிசி. "நீ உனது கொடிய பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவாய். நீ உனது வெறுப்பிற்காகத் தண்டிக்கப்படுவாய்" என்று சொல்கிறார்.
RCTA   தண்டனையின் நாட்கள் வந்துவிட்டன, கைம்மாறு கிடைக்கும் நாட்கள் புலர்ந்து விட்டன; 'இறைவாக்கினன் மடையனாகி விட்டான், இறையூக்கம் பெற்றவன் வெறிகொண்டு உளறுகிறான்' என்று இஸ்ராயேலர் எதிர்த்துப் பேசுகிறார்கள்; ஆம், இது உன் அக்கிரமத்தின் பெருக்கத்தையும், அளவுக்கு மிஞ்சிய மதியீனத்தையும் காட்டுகிறது.
ECTA   தண்டனைத் தீர்ப்புப் பெறும் நாள்கள் வந்துவிட்டன; பதிலடி கிடைக்கும் நாள்கள் வந்துவிட்டன; இதை இஸ்ரயேலர் அறிந்துகொள்வர். உன் தீச்செயலின் மிகுதியாலும், பெரும் பகையுணர்ச்சியாலும் "இறைவாக்கினன் மூடனாய் இருக்கிறான்; இறை ஆவி பெற்றவன் வெறிக்கொண்டு உளறுகின்றான், "என்கின்றாய்.