Versions
TOV அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
IRVTA அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும்,
பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும்,
நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார். PEPS
ERVTA மக்கள் கிறிஸ்துவிடம் தீயவற்றைப் பேசினார்கள். ஆனால் அவர் அவர்களுக்கு எந்தத் தீய பதிலையும் தரவில்லை. கிறிஸ்து துன்புற்றார். ஆனால் அவர் மக்களுக்கு எதிராகப் பேசவில்லை. இல்லை! தேவன் தன்னைக் கவனித்துக்கொள்ளுமாறு கிறிஸ்து விட்டு விட்டார். தேவன் சரியான முறையில் நியாயந்தீர்க்கிறார்.
RCTA அவர்கள் பழித்துரைத்த போது, அவர் எதிர்த்துப் பழிக்கவில்லை. துன்புற்ற போது அச்சுறுத்தவில்லை. நீதியோடு தீர்ப்பிடும் இறைவனிடம் தம் காரியத்தை ஒப்படைத்தார்.
ECTA பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார்.