Bible Language

1 Kings 16:15 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்; ஜனங்கள் அப்பொழுது பெலிஸ்தருக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராகப் பாளயமிறங்கியிருந்தார்கள்.
IRVTA   {இஸ்ரவேலின் ராஜாவாகிய சிம்ரி} PS யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருடத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாட்கள் ராஜாவாக இருந்தான்; மக்கள் அப்பொழுது பெலிஸ்தர்களுக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராக முகாமிட்டிருந்தார்கள்.
ERVTA   யூதாவின் அரசனாக ஆசா 27வது ஆண்டில் இருக்கும்போது சிம்ரி அரசனானான். அவன் திர்சாவிலிருந்து 7 நாட்கள்தான் ஆண்டான். இஸ்ரவேல் படைகள் பெலிஸ்தியரின் கிபெத்தோனுக்கு அருகில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் போருக்குத் தயாராயிருந்தார்கள்.
RCTA   யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறிய இருபத்தேழாம் ஆண்டில் சாம்பிரி தேர்சாவில் இருந்துகொண்டு ஏழுநாள் அரசாண்டான். அப்போது பிலிஸ்தியருக்குச் சொந்தமாய் இருந்த கெப்பெத்தோன் என்ற நகரை இஸ்ராயேலரின் படை வளைத்து முற்றுகையிட்டது.
ECTA   யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டு, சிம்ரி திர்சாவில் இருந்துகொண்டு ஏழு நாள்கள் அரசாண்டான். அப்போது படைவீரர் பெலிஸ்தியருக்குச் சொந்தமான கிபத்தோனுக்கு எதிராகப் பாளையம் இறங்கியிருந்தனர்.