Bible Language

1 Samuel 6:5 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.
IRVTA   ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சிலைகளையும் நீங்கள் உண்டாக்கி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்களுடைய தேவர்கள்மேலும், உங்களுடைய தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.
ERVTA   எனவே, உங்களை அழித்துக்கொண்டிருக்கும் தோல்கட்டி மற்றும் எலியின் உருவங்களை செய்யுங்கள் அத் தங்க உருவங்களை இஸ்ரவேல் தேவனுக்குக் காணிக்கையாக்குங்கள். பின் இஸ்ரவேலின் தேவன், உங்களையும் உங்கள் தெய்வங்களையும், உங்கள் நாட்டையும் தண்டிப்பதை நிறுத்துவார்.
RCTA   உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரே நோய் கண்டிருப்பதனால், பிலிஸ்தியர் மாநிலங்களின் கணக்குப்படி ஐந்து பொன் குதங்களும் ஐந்து பொன் எலிகளும் செய்யக்கடவீர்கள். உங்கள் குதங்களின் உருவங்களையும், நிலத்தைப் பாழ்படுத்தி வரும் எலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ராயேல் கடவுளுக்கு ஒப்பு கொடுத்து அவரை மாட்சிப்படுத்துங்கள். ஒருவேளை அவர் உங்களிடமிருந்தும் உங்கள் தேவர்களினின்றும் உங்கள் பூமியினின்றும் தமது கைவன்மையை நீக்குவார்.
ECTA   ஆகவே உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்களிடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் உங்கள் நாட்டினின்றும் அவரது கை விலக்கும்.