Bible Language

1 Thessalonians 5:14 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
IRVTA   மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள்.
ERVTA   சகோதர சகோதரிகளே! உழைக்காத மக்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள்.
RCTA   சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரையாவது: சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள். சோர்வுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள். மனவலிமையற்றவர்களைத் தாங்குங்கள். எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.
ECTA   அன்பர்களே! நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே; சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்; மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்; வலுவற்றோர்க்கு உதவுங்கள்; எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.