Bible Language

2 Chronicles 26:23 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   உசியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
IRVTA   உசியா இறந்த பின்பு, மக்கள் அவனைத் தொழுநோயாளியென்று சொல்லி, அவனை அவன் முன்னோர்களுக்கு அருகில், ராஜாக்களை அடக்கம்செய்கிற இடத்திற்கு அருகிலுள்ள நிலத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான். PE
ERVTA   உசியா மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். அரசர்களின் கல்லறைகளுக்கு அருகில் உள்ள வயல் வெளிகளில் உசியாவை அடக்கம் செய்தனர். ஜனங்கள், "உசியாவிற்குத் தொழு நோய் இருந்தது" என்றனர் என்பதே இதன் காரணம் யோதாம் புதிய அரசனாக உசியாவின் இடத்தில் அரசேற்றான். யோதாம் உசியாவின் மகன் ஆவான்.
RCTA   ஓசியாஸ் தன் முன்னோரோடு துயிலுற்றான். அவன் தொழுநோயாளியாய் இருந்ததால் மக்கள் அவனுடைய முன்னோரின் கல்லறையில் அவனை அடக்கம் செய்யாது, அதற்கடுத்த நிலத்தில் அவனைப் புதைத்தனர். அவனுடைய மகன் யோவாத்தாம் அவனுக்குப்பின் ஆட்சி புரிந்தான்.
ECTA   உசியா தன் மூதாதையருடன் துயில்கொண்டான். உசியா ஒரு தொழுநோயாளி என்பதால், அவன் மூதாதையரின் அருகில் அரசர்களுக்குரிய கல்லறை நிலம் ஒன்றில் அவனை அடக்கம் செய்தனர். அவனுக்குப் பிறகு அவன் மகன் யோத்தாம் அரசன் ஆனான்.