Bible Language

2 Chronicles 32:33 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
IRVTA   எசேக்கியா இறந்தபின்பு, அவனை தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் முக்கியமான உயரமான கல்லறையில் அடக்கம்செய்தார்கள்; யூதா முழுவதும், எருசலேமின் மக்களும் அவன் இறந்தபோது அவனுக்கு மரியாதை செலுத்தினார்கள்; அவன் மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான். PE
ERVTA   எசேக்கியா மரித்தான். அவன்தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். தாவீதின் முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகள் உள்ள மலைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியா மரித்ததும் யூதா மற்றும் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் அனைவரும் அவனுக்கு மரியாதைச் செய்தார்கள். மனாசே என்பவன் அவனுக்குப் பிறகு எசேக்கியாவின் இடத்தில் புதிய அரசன் ஆனான். மனாசே எசேக்கியாவின் மகன்.
RCTA   எசெக்கியாஸ் தன் முன்னோரோடு கண்வளர்ந்து, தாவீது குடும்பத்தாரின் கல்லறைக்கு மேலுள்ள ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டான். யூதா நாட்டார் அனைவரும் யெருசலேமின் எல்லாக் குடிகளும் அவனைக் குறித்துத் துக்கம் கொண்டாடினர். அவனுடைய மகன் மனாசே அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
ECTA   எசேக்கியா தம் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் புதல்வருக்குரிய கல்லறைகளில் உயர்ந்த ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் இறந்தபோது, யூதா, எருசலேம் மக்கள் எல்லாரும் அவருக்குச் சிறப்பு மரியாதை செய்தனர். அவருக்குப்பின் அவர்தம் மகன் மனாசே அரசனானான்.