Bible Language

2 Samuel 9 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   யோனத்தான் நிமித்தம் என்னால் தயவு பெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
IRVTA   {தாவீதும் மேவிபோசேத்தும்} PS யோனத்தானுக்காக என்னால் தயவு பெறக்கூடியவன் யாராவது சவுலின் குடும்பத்தார்களில் இன்னும் மீதியாக இருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
ERVTA   தாவீது, "சவுலின் வீட்டில் இன்னும் யாராவது உயிரோடிருக்கிறார்களா? நான் அவனுக்கு கருணை காட்ட விரும்புகிறேன். யோனத்தான் நிமித்தம் நான் இதைச் செய்ய விரும்புகிறேன்" என்று கூறினான்.
RCTA   தாவீது, "சவுலின் வீட்டாரில் இன்னும் எவனாவது விடுபட்டிருக்கிறானா? இருந்தால் யோனத்தாசின் பொருட்டு நான் அவனுக்கு இரக்கம் காட்டுவேன்" என்றார்.
ECTA   யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கு நான் கருணைக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா? என்று தாவீது கேட்டார்.