Bible Language

2 Chronicles 17 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான்.
IRVTA   {யூதாவின் ராஜாவாகிய யோசபாத்} PS ஆசாவின் இடத்தில் அவன் மகனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாக பெலனடைந்தான்.
ERVTA   யூதாவின் புதிய அரசனாக ஆசாவின் இடத்திலே அவனது மகனான யோசபாத் ஆனான். இவன் யூதாவை பலமுள்ளதாக ஆக்கினான். இஸ்ரவேலை எதிர்த்துப் போரிடும் அளவுக்கு அவன் யூதாவை பலப்படுத்தினான்.
RCTA   ஆசாவின் மகன் யோசபாத் அவனுக்குப் பின் அரியணை ஏறி இஸ்ராயேலுக்கு எதிராகத் தன்னைப் பலப்படுத்திக் கொண்டான்.
ECTA   ஆசாவின் மகன் யோசபாத்து அவனுக்குப்பின் ஆட்சியேற்று, இஸ்ரயேலுக்கு எதிராகத் தம்மை வலுப்படுத்திக் கொண்டார்.