Versions
TOV பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக.
IRVTA பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வீராக.
ERVTA அப்பொழுது பரலோகத்திலிருந்து அதனை கேட்டு அவர்களது பாவங்களை மன்னியும். நீர் அவர்களுக்கும் அவர்களது முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிற்கு அவர்களை திரும்பக் கொண்டு வாரும்.
RCTA நீர் விண்ணிலிருந்து உம் மக்கள் இஸ்ராயேலரின் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களது பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்களின் முன்னோருக்கும் நீர் கொடுத்த நாட்டுக்கு அவர்கள் திரும்பச் செய்யும்.
ECTA விண்ணகத்திலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, உம் மக்களாகிய இஸ்ரயேலரின் பாவத்தை மன்னித்து, அவர்களின் மூதாதையருக்கென நீர் அளித்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வீராக!