Bible Language

2 Kings 17 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருஷத்தில், ஏலாவின் குமாரனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
IRVTA   {இஸ்ரவேலின் கடைசி ராஜாவாகிய ஓசெயா} PS யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருட ஆட்சியில், ஏலாவின் மகனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருடங்கள் அரசாட்சிசெய்து,
ERVTA   யூதாவின் அரசனாகிய ஆகாசின் 12ஆம் ஆட்சியாண்டில் ஏலாவின் மகனாகிய ஓசெயா என்பவன் இஸ்ரவேலின் அரசனானான். இவன் ஒன்பது ஆண்டுகள் சமாரியாவில் இருந்து இஸ்ரவேலை அர சாண்டான்.
RCTA   யூதாவின் அரசன் ஆக்காசினுடைய ஆட்சியின் பத்தாம் ஆண்டில், ஏலாவின் மகன் ஓசே அரசனாகிச் சமாரியாவில் இஸ்ராயேலை ஒன்பது ஆண்டுகள் ஆண்டு வந்தான்.
ECTA   யூதா அரசன் ஆகாசு ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், ஏலாவின் மகன் ஓசேயா சமாரியாவில் அரசனாகி இஸ்ரயேலின் மீது ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.