Bible Language

2 Samuel 13:6 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
IRVTA   அப்படியே அம்னோன் வியாதியுள்ளவன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என்னுடைய சகோதரியான தாமார் வந்து நான் அவளுடைய கையினாலே சாப்பிடும்படி, என்னுடைய கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைச் செய்யும்படி அனுமதி கொடுக்கவேண்டும் என்றான்.
ERVTA   அவ்வாறே அம்னோன் படுக்கையில் படுத்து நோயுற்றவன்போல் நடித்தான். தாவீது அரசன் அம்னோனைப் பார்க்க வந்தான். அம்னோன் தாவீது அரசனிடம், "தயவு செய்து எனது சகோதரி தாமாரை உள்ளே வரச்செல்லுங்கள். அவள் என் முன்னே எனக்காக இரண்டு அப்பங்கள் சுட்டுதரட்டும். அப்போது அவள் கையால் ஊட்ட அவற்றை புசிப்பேன்" என்றான்.
RCTA   அதன்படி அம்னோன் நோயாளி போன்று பாசாங்கு செய்தான். அரசர் அவனைப் பார்க்க வந்தார். அம்னோன் அவரை நோக்கி, "என் சகோதரி தாமார் கையினால் நான் சாப்பிடும்படி என் கண்முன் இரண்டு பணியாரங்களைச் செய்து கொடுக்க அவளை அனுப்பும்படி வேண்டுகிறேன்" என்றான்.
ECTA   அவ்வாறே அம்னோன் படுத்துக் கொண்டு நோயுற்றவன் போல் பாசாங்கு செய்தான். அரசர் அவனைக் காண வந்தபோது, அம்னோன் அவரிடம், தயைகூர்ந்து என் சகோதரி தாமாரை அனுப்பி வையுங்கள், அவள் என் கண்முன்னே இரண்டொரு பணியாரங்கள் செய்தால், நான் அவள் கையிலிருந்து உண்பேன் "எனக் கூறினான்.