Bible Language

Colossians 2:5 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
IRVTA   சரீரத்தின்படி நான் தூரமாக இருந்தும், ஆவியின்படி உங்களோடுகூட இருந்து, உங்களுடைய ஒழுங்கையும், கிறிஸ்துவின் மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். PS
ERVTA   அங்கே நான் உங்களோடு இல்லை. எனினும் எனது இதயம் உங்களோடு உள்ளது. உங்களது நல்ல வாழ்வைக் காணும்போதும் கிறிஸ்துவுக்குள் உறுதியான விசுவாசத்தைக் காணும்போதும் நான் மகிழ்வடைகிறேன்.
RCTA   என் உடல் உங்களை விட்டுப் பிரிந்திருந்தாலும் என் உயிர் உங்களோடுதான் இருக்கின்றது. உங்களிடையே நிலவும் ஒழுங்கு முறைமையையும், கிறிஸ்துவில் உங்களுக்குள்ள உறுதியான விசுவாசத்தையும் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்.
ECTA   உடலால் உங்களோடு இல்லாவிட்டாலும் நான் உள்ளத்தில் உங்களுடன் இருக்கிறேன். உங்களிடையேயுள்ள ஒழுங்கு முறையையும் உறுதியான நம்பிக்கையையும் கண்டு நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.