Bible Language

Exodus 24 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள்.
IRVTA   {இரத்த உடன்படிக்கை உறுதிப்படுத்தப்படுதல்} PS பின்பு அவர் மோசேயை நோக்கி: “நீயும் ஆரோனும், நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபதுபேர்களும் கர்த்தரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து தொழுதுகொள்ளுங்கள்.
ERVTA   தேவன் மோசேயை நோக்கி, "நீயும் ஆரோன், நாதாப், அபியூ, மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மேல் வந்து என்னைத் தூரத்திலிருந்து தொழுதுகொள்ள வேண்டும்.
RCTA   மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீயும் ஆரோனும் நதாபும் அபியூவும் இஸ்ராயேல் பெரியார்களில் எழுபது பேரும் ஆண்டவரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து ஆராதனை செய்யுங்கள்.
ECTA   ஆண்டவர் மோசேயிடம், "ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோருடனும், இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களுடனும் ஆண்டவரிடமாய் ஏறிவாருங்கள்; தொலையில் நின்று தொழுதுகொள்ளுங்கள்.