Bible Language

Exodus 33:12 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே;
IRVTA   {மோசேயின் ஜெபமும் யெகோவாவுடைய மகிமையும்} PS மோசே யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு;
ERVTA   மோசே கர்த்தரை நோக்கி, "இந்த ஜனங்களை வழிநடத்துமாறு நீர் சொன்னீர். ஆனால் என்னோடு வருபவர் யார் என்பதை நீர் கூறவில்லை. நீர் என்னிடம், ‘உன்னை நன்கு அறிவேன். உன்னைக் குறித்து பிரியமாயிருக்கிறேன்.’ என்றீர்.
RCTA   மோயீசன் ஆண்டவரை நோக்கி: நீர் இந்த மக்களை அழைத்துக் கொண்டு போ என்று கட்டளையிடுகிறீர். ஆயினும், என்னோடு கூட இன்னாரை அனுப்புவீர் என்பதை எனக்கு அறிவிக்கவில்லை. சிறப்பாக, நீர் என்னை நோக்கி: உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்து அறிந்திருக்கிறோம் என்றும், நமக்கு நீ விருப்பமுள்ளவன் ஆனாய் என்றும் திருவுளம்பற்றியிருந்தீரே.
ECTA   மோசே ஆண்டவரிடம், ""இம்மக்களை நடத்திச்செல்" என்று நீரே என்னிடம் கூறியிருந்தும் என்னோடு அனுப்பப்போகும் ஆளைப்பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. "பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்" என்றும் "நீ என் பார்வையில் தயை பெற்றுள்ளாய்" என்றும் கூறியுள்ளீர்.