Bible Language

Genesis 29:34 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.
IRVTA   பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றதால் அவர் இப்பொழுது என்னோடு சேர்ந்திருப்பார்” என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள்.
ERVTA   லேயாள் மீண்டும் கர்ப்பமாகி இன்னொரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள். "இப்பொழுது என் கணவர் என்னை நிச்சயம் நேசிப்பார். நான் அவருக்கு மூன்று மகன்களைக் கொடுத்திருக்கிறேன்" என்றாள்.
RCTA   அவள் மூன்றாம் முறை கருவுற்று இன்னொரு புதல்வனைப் பெற்றாள். இனிமேல் என் கணவர் என் மீது அன்பாய் இருப்பார். அவருக்கு மூன்று மக்களைப் பெற்றேனன்றோ? என்று, இதை முன்னிட்டு அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள்.
ECTA   அவர் மீண்டும் கருவுற்று இன்னொரு மகனைப் பெற்றெடுத்தார். "இப்பொழுது என்கணவர் என்னோடு இணைந்திருப்பார் என்பது உறுதி. ஏனெனில் நான் அவருக்கு மூன்று புதல்வரைப் பெற்றெடுத்துள்ளேன்" என்று கூறி அவனுக்கு "லேவி "(3 ) என்று பெயரிட்டார்.